அரியலூர்: முகக்கவசம் அணியாமல் சுற்றித் திரிபவர்களுக்காக காவல்துறையினர் வித்தியாசமான முறையில் விழிப்புணர்வு செய்தனர்.
கரோனா தொற்றுக் காரணமாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தளர்வை அறிவித்ததால் பொதுமக்கள் தங்களது பணிக்காக இயல்பாக வெளியே வந்து செல்கின்றனர். இதில் பெரும்பாலானோர் முகக்கவசங்கள் அணிவதில்லை.
இதனால் அரியலூர் மாவட்டம் கயரலாபாத் காவல்துறையினர் வித்தியாசமான முறையில் நாடகக் குழுவினர்களை வைத்து எமதர்மன் வேடமணிந்து சாலையில் செல்பவர்களிடம் முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும், தலைக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் என வலியுறுத்தினார். அவ்வாறு அணிந்து செல்லாவிட்டால் எமனின் பாசக்கயிறு உங்களை நோக்கி வரக்கூடும் என எச்சரித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இதையும் படிங்க: ஹத்ராஸில் தொடரும் கொடூரம் : பாலியல் வன்புணர்வுக்குள்ளான குழந்தை