அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே இலையூர் ஊராட்சி கண்டியன்கொல்லை கிராமத்தில் கடந்த சில மாதங்களாக போதுமான அளவிற்கு குடிநீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. கடந்த 10 நாட்களாக கீழத்தெருவில் சுமார் ஐம்பது குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிகளுக்கு தண்ணீர் முறையாக வருவதில்லை எனக்கோரி இலையூர் அரசு மேல்நிலைப்பள்ளி எதிர்புறம் சாலையில் காலியிடங்கள் வைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சிவதாஸ் மற்றும் ஜெயங்கொண்டம், உதவி ஆய்வாளர் வசந்த் ரவிச்சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தண்ணீர் கிடைக்க உடனடியாக ஏற்பாடு செய்து தருவதாகக் கூறியதன் பேரில் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்
போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் தமிழ்நாடு அரசிடம் மழை வருவதற்கு முன்பே ஏரி குளங்களை முழுமையாக தூர்வாரி நிலத்தடி நீரை சேமிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.