அரியலூா் மாவட்டத்தில் திருமானூர், தா.பழூர் ஆகிய பகுதிகள் டெல்டா பகுதிகளாகும். இங்கு காவிரி உபரிநீர்ப் பாசனம் கொண்டு நெல் சாகுபடி செய்யப்படுகின்றது. இந்நிலையில் தற்போது இங்கு விவசாயிகள் நெற்பயிர்களை அறுவடை செய்துவருகின்றனா்.
இந்நிலையில், ஸ்ரீபுரந்தான் பகுதியில் திறக்கப்படாத கொள்முதல் நிலையம் முன்பு விவசாயிகள் பாதுகாப்பற்ற நிலையில் நெல் மணிகளைக் கொட்டி 15 நாள்களாகக் காத்துக் கிடக்கின்றனா். மேலும் பன்றிகள் நெல்மணிகளைச் சேதப்படுத்தி விடும் என்ற அச்சத்தில் அதற்குப் பாதுகாப்பாக இரவிலும் விவசாயிகள் காவல் காத்துவருகின்றனா்.
மேலும் பனியால் நெல் ஈரமாவதாகவும் அதனால் நெல் குறைந்த விலைக்கு விற்பனையாகும் என்ற அச்சம் இருப்பதாகவும் விவாசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க:டிஎன்பிஎஸ்சி தேர்வை மீண்டும் நடத்த வேண்டும் - டிடிவி தினகரன்!