அரியலூர் மாவட்டம் தாமரைக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவருக்கும் இவருடைய உறவினர் பாண்டியராஜன் என்பவருக்கும் இடத்தகராறு இருந்துவந்துள்ளது. இந்நிலையில் கடந்த மாதம் இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டபோது அதே ஊரைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் இருவரையும் சமாதானப்படுத்த முயன்றுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த வெங்கடேசன் ரமேஷை அரிவாளால் வெட்டிக் கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இதில் ரமேஷிற்கு உடலில் காயங்கள் ஏற்பட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்குச் சென்று பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர்.
இது குறித்து ரமேஷ் அளித்த புகாரின்பேரில் காவல் துறையினர் வெங்கடேசனைக் கைதுசெய்து ஜெயங்கொண்டம் கிளைச் சிறையில் அடைத்தனர்.
மேலும் வெங்கடேசன் வெளியே வந்தால் மீண்டும் பல்வேறு தகராறுகள் ஏற்படும் என்பதால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் பரிந்துரையின்பேரில் மாவட்ட ஆட்சியர் ரத்னா குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டதை அடுத்து காவல் துறையினர் திருச்சி மத்திய சிறையில் அவரை அடைத்தனர்.