பெரம்பலூர் மானாமதுரை தேசிய நெடுஞ்சாலையில் அரியலூர் ரயில்வே கேட்டில் ரயில்கள் செல்லும்போது ரயில்வே கேட் மூடப்பட்டிருந்ததால் அங்கு அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனால் மத்திய அரசானது, சேது பாரதம் திட்டத்தின்கீழ் 24 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ரயில்வே மேம்பாலத்தைப் பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் திறந்துவைத்தார்.