அரியலூர், புது மார்க்கெட் தெருவைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவரது மனைவி ஸ்மிதா. இவர்களின் முதல் துணைவன், துணைவி இறந்ததைத் தொடர்ந்து, இவர்கள் இருவரும் முறைப்படி இரண்டாம் திருமணம் செய்துகொண்டனர். இத்தம்பதியருக்கு இரண்டு வயதில் ரித்தீஷ் என்ற அழகிய மகன் இருந்தார்.
இந்நிலையில், உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு தன்னை அழைத்துச் செல்லவில்லை என ஸ்மித்தா, தன் கணவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ஸ்மிதா, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது தாய் அமுதாவை செல்ஃபோனில் அழைத்து, "எனக்கு போட்ட நகைகளை இந்த இடத்தில் வைத்துள்ளேன், அதை எடுத்துக் கொள்ளுங்கள்" என கூறிவிட்டு ஸ்விட்ச் ஆஃப் செய்துள்ளார்.
பின்னர், தன் இரண்டு வயது மகனைக் கொலை செய்துவிட்டு, தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக, கயா்லாபாத் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.