அரியலூர் அருகே பெரிய நாகலூர் கிராமத்தில் தமிழ்நாடு கனிம நிறுவத்தின் சார்பில் புதிதாக அமைக்கப்படும் சுண்ணாம்புக்கல் சுரங்கத்திற்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் வாலாஜா நகர் கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது.
இதில் பழைய சுரங்கங்களை மூடாமல் புதிய சுரங்கத்திற்கு அனுமதி அளிக்கக்கூடாது அரியலூர் மாவட்டத்தில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. மேலும் பல சுரங்கங்கள் வெட்டப்பட்டால் மக்கள் வாழ முடியாத நிலை ஏற்படும் எனவே அனுமதி அளிக்கக்கூடாது என பொதுமக்கள் தெரிவித்தனர்.
மேலும் சுண்ணாம்புக்கல் சுரங்கப் பகுதியில் உள்ள கிராம மக்களுக்கு கனிம நிதியை முறையாக செலவிடவேண்டும் எனவும், கனிம நிதி செலவிடுவதை மாவட்ட நிர்வாகம் கண்காணிக்க வேண்டும் எனவும் கூறினர்.