தமிழ்நாட்டில் ஒன்பது மாவட்டங்களைத் தவிர்த்து மற்ற 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்றுவருகிறது. அரியலூர் மாவட்டத்திலும் காலை 7 மணிக்கே வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்றுவருகிறது.
காலை முதல் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்துவருகின்றனர். மேலும் முதல் முறை வாக்காளர்களும் ஆர்வமுடன் தங்கள் வாக்குகளைப் பதிவுசெய்துவருகின்றனர்.
இந்நிலையில் அரசு தலைமை கொறடா ராஜேந்திரன் தாமரைகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும் மாவட்ட ஆட்சியர் ரத்னா வாலாஜா ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியிலும் தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனர்.
இதையும் படிங்க: