அரியலூர் மாவட்டம் விளாங்குடி கிராமத்தில் திருச்சி - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள பகுதியில் அமைந்துள்ளது திருக்குளம் ஏரி. இதன் அருகே உள்ள வீடுகள், கடைகளின் கழிவு நீர் ஏரியில் விடப்படுவதால் மாசடைந்து காணப்படுகிறது.
சில நாட்களாக இந்த ஏரியில் உள்ள மீன்கள் அனைத்தும் இறந்து கரையோரத்தில் மிதக்கின்றன. இதனால் ஏரியில் துர்நாற்றம் வீசுவதால், சாலைகளில் செல்வோர் பாதிக்கப்படுகின்றனர். இதன் காரணமாக அப்பகுதி மக்களுக்கு பல்வேறு நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, ஊராட்சி நிர்வாகமும், மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு ஏரியை சுத்தப்படுத்த வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.