அரியலூர் மாவட்டத்தில் கரோனா தொற்று தாக்கத்தால் பள்ளிகள் மூடப்பட்டிருக்கின்றன.
இதனால், சத்துணவுத் திட்டத்தின்கீழ் பயன்பட்டுவரும் மாணவ, மாணவிகள், பெற்றோர்களுக்கு உலர் உணவுப் பொருள்கள் வழங்க வேண்டும் எனத் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து, அரியலூர் மாவட்டத்தில் ரூ.1.79 கோடி மதிப்பீட்டில் 686.61 மெட்ரிக் டன் உணவுப் பொருள்கள் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டுவருகின்றன.
இதனைத் தமிழ்நாடு அரசின் தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் இன்று கருத்தாய் குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆய்வுசெய்தார்.
அப்போது, மாணவர்களின் பெற்றோர்களுக்கு உணவுப்பொருள்களை வழங்கினார். பின்னர் பள்ளி வளாகத்தில் காய்கறி விதைகளையும் மரக்கன்றுகளையும் நட்டார். இந்நிகழ்ச்சியின்போது, அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரத்னா உடனிருந்தார்.