அரியலூர் சின்னக்கடை வீதியில், தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நல அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் அரியலூர் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கணக்கில் வராத 17,500 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
தொடர்ந்து அலுவலர்கள் தொழிலாளர் அலுவலக கண்காணிப்பாளர் நூருல்லாவிடம் விசாரணை மேற்கொண்டனர். ஆனால், முறையான தகவல் அளிக்காததால், அலுவலகத்தில் பணியாற்றிய 10 ஊழியர்கள் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் பரிந்துரை செய்தனர்.
இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு காவல் துணை கண்காணிப்பாளர் கூறும்போது, தொழிலாளர்கள் பயன்களைப் பெறுவதற்குப் பணம் பெற்றுக் கொண்டு அலுவலர்கள் செயல்பட்டதாக வந்த புகாரை அடுத்து, இந்த திடீர் சோதனை நடைபெற்றதாகத் தெரிவித்தார்.