அரியலூர் மாவட்டம் செந்துறை, உடையார்பாளையம், ஆண்டிமடம் ஆகிய இடங்களில் மாற்றுக் கட்சியில் இருந்து பாஜகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.
குறிப்பாக செந்துறையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாஜக மாநில துணைத் தலைவர் அண்ணாமலை புதிய உறுப்பினர்களுக்கு சால்வை அணிவித்து வரவேற்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது, "கிராமப்புற மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என நான்கு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பாஜக வலியுறுத்தி வருகிறது. இந்தச் சூழ்நிலையில் தற்போது தமிழ்நாடு அரசு கோரியுள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு உள் இட ஒதுக்கீடுக்கு பாஜக கோரியுள்ளது.
மேலும் ஆளுநர் இதுகுறித்து ஆலோசித்து நல்ல முடிவை அறிவிப்பார்" என நம்பிக்கை தெரிவித்தார்.
இதையும் படிங்க: தடையை மீறி கூட்டம்- பாஜக துணைத்தலைவர் அண்ணாமலை மீது வழக்கு!