அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள சென்னிவனம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம் என்பவர் மனைவி ஜோதி வயது 40. கணவரை இழந்த இவர் மேட்டுப்பாளையம் கிராமத்தில் உள்ள அவரது உறவினர் வீட்டில் தனது மகள் சந்திரலேகாவுடன் கறவை மாடுகள் வளர்த்துவருகிறார்.
இந்நிலையில், நேற்று வழக்கம்போல் கறவை மாட்டிற்கு தண்ணீர் வைப்பதற்கு வீட்டின் முன்பு இருந்த அன்னக்கூடையை எடுக்கச் சென்றுள்ளார். வீட்டுற்கு வரும் மின்இணைப்பிற்கான வயர் அறுந்து அன்னக்கூடையில் கிடந்ததுள்ளது. இதனை கவனிக்காமல் அன்னக்கூடையை ஜோதி எடுத்தபோது மின்சாரம் தாக்கியது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
அவ்வழியே சென்ற உறவினர்கள் இதனை கண்டு ஜோதியை மீட்டு, உடற்கூறாவிற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த செந்துறை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க...பனிச்சரிவில் சிக்கி தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர் உயிரிழப்பு!