அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோவிட் -19 பரிசோதனை செய்தவர்களுக்கு அதன் முடிவுகளை, தேசிய தகவல் மையம் மூலம் உருவாக்கப்பட்ட இணையதள மென்பொருள் வாயிலாக பெறுவதற்கான சேவையை அம்மாவட்ட ஆட்சியர் ரத்னா தொடங்கி வைத்தார்.
அரியலூர் மாவட்டத்தில் கரோனா பரிசோதனை செய்தவர்களுக்கு முடிவுகள் ஆன்லைன் வாயிலாக அனுப்பப்பட உள்ளது. பரிசோதனை முடிவுகள் 48 மணி நேரத்திற்குள் தெரியவரும். பொதுமக்கள் விழிப்புடன் இருந்து தேவையற்ற பயணங்களை தவிர்த்து முகக் வசம் அணிந்து, தகுந்த இடைவெளியை பின்பற்றினால் கரோனாவை ஒழித்துவிட முடியும் என ஆட்சியர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அம்பத்தூர், அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் குறைந்த கரோனா பாதிப்பு!