அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஜூபிலி ரோட்டில் மசூதி தெருவில் வசித்து வசிப்பவர் மகாலிங்கம். இவர் அதே தெருவில் உள்ள காளியம்மன் கோயிலில் பூசாரியாக உள்ளார். இவரது வீட்டின் எதிர்புறம் வசித்து வருபவர் ஜெயிலாபுதீன். இவர் ரைஸ் மில் நடத்தி வருகிறார்.
இவர்கள் இருவரும் சுமார் 40 ஆண்டுகளாக இணைபிரியாத நண்பர்களாக இருந்து வந்துள்ளனர். இந்நிலையில், இருவருக்கும் நேற்று முன்தினம் (ஏப்.06) திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
![இறப்பிலும் இணைபிரியாத இந்து முஸ்லீம் நண்பர்கள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-pbl-01-hindu-muslim-friends-death-script-image-tn10037_08042021120448_0804f_1617863688_977.jpg)
இந்நிலையில் ஜெயிலாபுதீன் சிகிச்சைப் பலனின்றி நேற்று (ஏப்.07) உயிரிழந்தார். இவரின் இறப்புச் செய்தியை கேட்டு அதே மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த மகாலிங்கம் மயக்கமடைந்த நிலையில், அடுத்த அரை மணி நேரத்தில் அவரது உயிரும் பிரிந்தது. இறப்பிலும் இணைபிரியாமல் நண்பர்கள் உயிரிழந்த இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.