கரோனா வைரஸ் தாக்குதல் தீவிரமடைந்த நிலையில் பொதுமக்கள் அதிகம் கூடுவதைத் தவிர்க்குமாறு மத்திய, மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளது. இதனால், மக்கள் குறைதீர்க்கும் கூட்டம், அம்மா திட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் வரும் மார்ச் 31ஆம் தேதி வரை ரத்து செய்யக்கோரி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இதனையறியாத பொதுமக்கள் சிலர் வழக்கம்போல் மனு அளிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். ஆட்சியர் அலுவலகத்தின் வெளியே பொதுமக்கள் தாங்கள் கொண்டு வந்த மனுவை பெட்டியில் போட்டுச் செல்லுமாறு அலுவலர்கள் கூறியுள்ளனர்.
பின்னர், பொதுமக்களும் தாங்கள் கொண்டுவந்த மனுவை பெட்டியில் போட்டுவிட்டுச் சென்றனர். மேலும், பெட்டியில் போடப்படும் மனுக்கள் மீது விரைவில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக்கொண்டனர்.
இதையும் படிங்க: கரோனா: நீதிமன்றத்தில் பொதுமக்களுக்கு அனுமதி மறுப்பு