ETV Bharat / state

லஞ்சம் வாங்கிய அரசு அலுவலர்...கையும் களவுமாக கைது!

அரியலூர்: பதினைந்தாயிரம் ரூபாய் லஞ்சமாக வாங்கிய உணவு பாதுகாப்பு அலுவலரை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கைது செய்தனர்.

author img

By

Published : Mar 10, 2020, 10:29 AM IST

உணவு பாதுகாப்பு துறை அலுவலர்
உணவு பாதுகாப்பு துறை அலுவலர்

தஞ்சாவூரில் மளிகை கடை நடத்தி வரும் பரணிதரன் என்பவர் அரியலூர் மாவட்டத்திலிருக்கும் பல கடைகளுக்கு சமையல் எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வாகனம் மூலம் விநியோகம் செய்து வருகின்றார்.

இந்நிலையில், நான்கு மாதத்திற்கு முன்பு பரணிதரன் விற்கும் எண்ணெய் தரமில்லாதது எனக் கூறி, திருமானூர் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் அழகுவேல் வழக்கு தொடர்ந்தார்.

லஞ்சம் வாங்கிய உணவு பாதுகாப்பு துறை அலுவலர்...கையும் களவுமாக கைது

தற்போது, இந்த வழக்கை ஈடுகட்ட பதினைந்தாயிரம் ரூபாய் லஞ்சமாக கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத பரணிதரன், லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரின் உதவியை நாடியுள்ளார். இதனையடுத்து, அவர்களின் அறிவுறுத்தலின்படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை திருமானூர் மின் அலுவலகம் அருகே அழகுவேலிடம் கொடுத்துள்ளார்.

அழகுவேல் லஞ்ச பணத்தை வாங்கும்போது, துணை காவல் ஆய்வாளர் சந்திரசேகரன் தலைமையில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர், அழகுவேலை கையும் களவுமாக பிடித்தனர். இது தொடர்பாக அவரிடம் தொதடர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க: திருமணம் செய்ய மறுத்த பெண்ணின் மகனைக் கொலை செய்தவருக்கு ஆயுள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.