ETV Bharat / state

காவிரி நீரை மலர் தூவி வரவேற்ற விவசாயிகள்!

author img

By

Published : Jun 24, 2020, 8:04 PM IST

அரியலூர்: காவிரி நீரை மலர் தூவி வரவேற்றதுடன், விவசாயம் செழிக்கவும் உலகம் அமைதி பெற வேண்டியும் ஆற்றங்கரை சிவன் கோயிலில் விவசாயிகள் வழிபாடு நடத்தினர்.

விவசாயிகள்
விவசாயிகள்

குடகு மலையில் உருவாகும் காவிரி ஆறு பல்லாயிரம் மைல்கள் கடந்து அரியலூர் மாவட்டம் கல்லணை வந்தடைந்தது. இதையடுத்து கல்லணையில் இருந்து கொள்ளிடத்தில் தண்ணீர் திறக்கப்பட்டது.

அதன் மூலம் வரும் உபரி நீரானது பொன்னாற்று பாசன வாய்க்கால் கடைமடை பகுதிக்கு வந்தது. வெள்ளம் போல பெருக்கெடுத்து வந்த காவிரி நீரை தா.பழூர் விவசாயிகள் மலர் தூவி வணங்கி வரவேற்றனர்.

தண்ணீர் வரத்தால் பெரும் மகிழ்ச்சியடைந்த விவசாயிகள், ஆற்றின் ஓரத்தில் அமைந்துள்ள சிவன் கோயிலில் விவசாயம் செழிக்கவும் உலகம் அமைதி பெற வேண்டியும் வழிபாடு நடத்தினர்.

அரியலூர் மாவட்டத்தில் டெல்டா பகுதியாக விளங்கும் தா.பழூர் ஒன்றியம் விவசாயம் நிறைந்த பகுதியாகும். பொன்னாற்று பாசன நீர் மூலம் 25 கிராமங்களில் 4 ஆயிரத்து 694 ஏக்கர் பரப்பளவில் சம்பா, குறுவை சாகுபடி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: திறந்த வெளியில் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகள்: நோய்த்தொற்று ஏற்படும் அபாயம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.