ETV Bharat / state

பொய்த்துப்போன மழை: வர்ண பகவானின் கொடும்பாவி எரிப்பு!

அரியலூர்: மழை வேண்டி காலிKD குடங்களுடன் ஏரியில் இறங்கி வர்ணபகவானின் கொடும்பாவியை எரித்து விவசாயிகள் நூதன வழிபாட்டில் ஈடுபட்டனர்.

மழை வேண்டி
author img

By

Published : May 31, 2019, 2:28 PM IST

அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட கோழபுரம் அருகே கடந்த ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ராஜேந்திர சோழனால் குடிநீருக்காகவும், பாசனத்திற்காகவும் சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் பொன்னேரி அமைக்கப்பட்டது. தற்போது இந்த ஏரி மண் மேடாகவும், மழைக்காலங்களிலும் தண்ணீரை சேமிக்க முடியாத நிலையிலும் உள்ளது.

இந்நிலையில் வறண்டு கிடக்கும் ஏரியில், காலிக் குடங்களுடன் வர்ணபகவான் கொடும்பாவியை எரித்து ஆற்றுபாசன விவசாயிகள் நூதன வழிபாட்டில் ஈடுபட்டனர். இது குறித்து விவசாயிகளிடம் பேசுகையில், பொன்னேரி உள்ளிட்ட அனைத்து பாசன ஏரிகளையும் தூர்வாரி வரத்து, வாய்க்கால்களை சீரமைக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு நீண்ட வருடங்களாக கோரிக்கை வைத்துவருகிறோம். ஆனால், இதுவரை எந்தவொரு நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

தற்போது சிதம்பரம் - திருச்சி தேசிய நெடுஞ்சாலை அகலப்படுத்தும் பணி தொடங்கப்படவுள்ளது. சாலைகள் அமைக்க பள்ளமான இடங்களில் கொட்டி நிரப்பப்படும் மண்ணை பொன்னேரியிலிருந்து எடுத்துக் கொள்ள தமிழ்நாடு அரசு உத்தரவிட வேண்டும். இதன் மூலம் பொன்னேரி அகலப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளனர்.

மழை வேண்டி விவசாயிகள் நூதன வழிபாடு

அரியலூர் - மழை வேண்டி காலி பானைகளுடன் ஏரியில் இறங்கி விவசாயிகள் வர்ணபகவான் கொடும்பாவியை எரித்து விவசாயிகள் நூதன வழிபாடு

 அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் அருகே கடந்த ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ராஜேந்திர சோழனால் குடி தண்ணீருக்காகவும் பாசனத்திற்காகவும் சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டது பொன்னேரி. இந்த ஏரி தற்போது மண்மேடாக உள்ளது. மழைக்காலங்களில் கூட இந்த ஏரியில் தண்ணீரை சேமிக்க முடியாத நிலை உள்ளது. 

 இந்நிலையில் வறண்டு கிடக்கும் ஏரியில் ஏரி ஆற்று பாசன விவசாயிகள் சங்கத்தினர் காலி பானையுடன் வருண பகவான் கொடும்பாவியை கொளுத்தி நூதன வழிபாடு நடத்தினர்

 இந்த ஏரியில் தண்ணீர் சேமிக்கும் போது அருகில் உள்ள ஐம்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயர்வதோடு 200ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது

   இது குறித்து விவசாயிகள் கூறும்போது அரியலூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி உள்ளிட்ட அனைத்து பாசன ஏரிகளையும் தூர்வாரி வரத்து வாய்க்கால் சீரமைக்க வேண்டும் என நீண்ட வருடங்களாக தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால் அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை இந்நிலையில் தற்போது சிதம்பரம் திருச்சி தேசிய நெடுஞ்சாலை அகலப்படுத்தும் பணி தொடங்கப்பட உள்ளது சாலைகள் அமைக்கும் போது பள்ளமான இடங்களில் கொட்டி நிரப்பப்படும் மண்ணை பொன்னேரியில் இருந்து எடுத்துக் கொள்ள தமிழக அரசு உத்தரவிட வேண்டும் இதன் மூலம் ஏரி அகலப்படுத்தப்படும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.