ETV Bharat / state

ஹைட்ரோகார்பன் திட்டத்தை தடுக்க வேண்டி சித்தர்களிடம் மனு

அரியலூர்: ஹைட்ரோகார்பன் திட்டத்தால் விவசாயம் பாதிக்கப்படுவதை தடுக்க வேண்டி சித்தர்களிடம் விவசாயிகள் மனு கொடுத்தனர்.

சித்தர்களிடம் மனு
author img

By

Published : Jun 7, 2019, 3:15 PM IST

அரியலூர் மாவட்டம் புதுக்குடி கிராமத்தில் மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன் திட்ட ஆய்வு பணிக்காக ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை மத்திய அரசு தடை செய்து தமிழ்நாட்டை பாதுகாக்க வேண்டி அப்பகுதி கிராம மக்களும், விவசாயிகளும் 18 சித்தர்களிடம் மனு அளித்தனர்.

விவசாயிகள் ஹைட்ரோகார்பன் திட்டத்தைத் தடுக்க வேண்டி சித்தர்களிடம் மனு

இந்த நூதன மனு அளித்த நிகழ்வில் புதுக்குடி கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் கலந்துகொண்டனர்.

அரியலூர் & ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களால் விவசாயம் பாதிக்கப்படுவதை தடுக்க வேண்டும் என 18 சித்தர்களிடம் மனு அளித்து விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர் 

   அரியலூர் மாவட்டம் புதுக்குடி கிராமத்தில் மத்திய அரசின் ஹைட்ரோகார்பன் திட்ட ஆய்வு பணிக்காக ஆழ்துளைக்கிணறு அமைக்கப்பட்டுள்ளது இந்நிலையில் ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட பல்வேறு நாசகார திட்டங்களால் விவசாயம் பாதிக்கப்படுவதால் இத் திட்டங்களை மத்திய அரசு தடை செய்து தமிழ்நாட்டை பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் 18சித்தர்களிடம் மனு அளித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகளை மற்றும் விவசாயத்தை பாதிக்கக்கூடிய இவ்வகையான திட்டங்களை செயல்படுத்துவதை மத்திய அரசு தடை செய்து விவசாயத்தையும் விவசாயிகளையும் காப்பாற்ற முன்வர வேண்டும் என மத்திய அரசுக்கு அறிவுறுத்த வேண்டும் என 18 சித்தர்களிடம் வேண்டிக் கொண்டனர். இந்த நூதன போராட்டத்தில் புதுக்குடி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பலரும் கலந்து கொண்டனர்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.