கரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அரியலூரில் உள்ள 25 வயது பெண் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனையடுத்து அரியலூர் மாவட்டத்தில் உள்ள 16 ஆயிரத்து 616 வீடுகளில் 50 மருத்துவர் கொண்ட 450 பேர் விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டிற்கு செல்லும் இவர்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு காய்ச்சல், சளி, இருமல் உள்ளதா அல்லது வெளிநாட்டில் இருந்து யாராவது வந்துள்ளார்களா என்றும் விசாரணை நடத்துகின்றனர்.
அரியலூரிலுள்ள 18 வார்டுகள், அரியலூரை சுற்றியுள்ள கிராமங்களில் இப்பணிகள் நடைபெற்று வருகிறது.