அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளிடையே விளையாட்டு போட்டிகளை ஊக்குவிக்கும் விதமாக பள்ளிக்கல்வித்துறை பல்வேறு போட்டிகளை நடத்திவருகிறது. அதன்படி அரியலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.
அதில் கபடி, வாலிபால், கால்பந்து, சதுரங்கம், கேரம், பூப்பந்து உள்ளிட்டப் போட்டிகள் நடத்தப்பட்டது. மாணவ, மாணவிகள் என இருபபாலருக்கும் தனித்தனியே நடைபெற்ற இந்த போட்டிகளில் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இறுதியாக வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ் வழங்கப்பட்டன.
இதையும் படிங்க: மூன்றாவது முறையாக முதல் சுற்றிலேயே நடையைக் கட்டும் ஷரபோவா!