அரியலூர் மாவட்ட இறகு பந்தாட்ட கழகம் சார்பில் அரியலூரில் உள்ள உள்விளையாட்டு அரங்கில், மாவட்ட அளவிலான இறகு பந்து இறுதிப் போட்டி அண்மையில் நடைபெற்றது. இதில் அரியலூர், ஜெயங்கொண்டம், ஆலத்தியூர், மீன்சுருட்டி, கீழப்பழுவூர், திருமானூர், செந்துறை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 60க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன.
போட்டிகள் அனைத்தும் லீக் சுற்று முறையில், ஓபன் பிரிவில் நடத்தப்பட்டன. இறுதிச்சுற்று போட்டியில் ஜெயங்கொண்டம் அணி - அரியலூர் அணியை 15க்கு 21, 17க்கு 21 என்ற நேர் செட் கணக்கில் வென்று கோப்பையை கைப்பற்றியது.
மேலும், வெற்றிபெற்ற அணிகளுக்கும் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்களுக்கும் பரிசுகள், சான்றிதழ் வழங்கப்பட்டன.
இதையும் படிங்க: மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள்: அசத்திய அரசுப்பள்ளி மாணவர்கள்!