ETV Bharat / state

‘ஹைட்ரோ கார்பன் திட்டம் வந்தால் தமிழ்நாடு போர்க்களமாகும்’ - கவுதமன் எச்சரிக்கை - modi

அரியலூர்: "மத்திய அரசு கொண்டுவர முயலும் ஹைட்ரோ திட்டத்திற்கு மாநில அரசு அனுமதி கொடுத்தால் தமிழ்நாடு போர்க்களமாகும்" என்று, தமிழ் பேரரசு கட்சியின் நிறுவனத் தலைவர் கவுதமன் தெரிவித்துள்ளார்.

gowthaman
author img

By

Published : May 29, 2019, 8:59 PM IST

அரியலூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழ் பேரரசு கட்சியின் நிறுவனத் தலைவர் கவுதமன், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மத்திய அரசு வழங்கியுள்ள உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் ஒரு வேளை இத்தட்டத்திற்கு மாநில அரசு அனுமதி வழங்கினால் தமிழ்நாடு போர்க்களமாகும் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.

தொடர்ந்து பேசிய அவர், கடந்தாண்டு கர்நாடகா தர வேண்டிய 19.5 டிஎம்சி தண்ணீரை பெறுவதற்கு தமிழ்நாடு அரசு போதிய அழுத்தம் கொடுக்காதது வருத்தம் அளிப்பதாகவும், இந்த ஆண்டாவது கர்நாடகா உரிய தண்ணீரை திறந்துவிட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

கவுதமன் செய்தியாளர்கள் சந்திப்பு

மேலும், மோடி பதவியேற்பு விழாவிற்கு சீமான், டிடிவி தினகரன் போன்றவர்களுக்கு அழைப்பு விடுக்காமல் கமல், ரஜினி போன்றவர்களுக்கு அழைப்பு விடுத்திருப்பதில் இருந்தே பாஜகவுடன் அவர்கள் இருவரும் கைகோர்த்திருப்பது உறுதியாகியுள்ளதாகவும் கவுதமன் கூறியுள்ளார்.

அரியலூர்   -  கடந்த  ஆண்டு கர்னாடக தரவேண்டிய 19.5 டிஎம்சி தண்ணீரை தமிழக அரசு வலியுறுத்தி கேட்காதது வேதனைக்குரியது- தமிழ் பேரரசு கட்சி நிறுவனத்தலைவர் கௌதமன் செய்தியாளர்களுக்கு பேட்டி

அரியலூரில் தமிழ் பேரரசு கட்சி நிறுவனத்தலைவர் கௌதமன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவா் 
மீத்தேன் ஹைட்ரோ கார்பன் திட்ட உரிமையை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். தமிழக அரசு இசைவு தெரிவித்தால் தமிழகம் போர்க்களமாகும்.

கடந்த ஆண்டு கர்னாடக தரவேண்டிய 19.5 டிஎம்சி தண்ணீரை தமிழக அரசு வலியுறுத்தி கேட்காதது வேதனைக்குரியது.. இது தமிழக அரசின் கையாலாகாத்தனம்.
இந்த மாதம் அறிவிக்கப்பட்ட தண்ணீர் எப்போது தர போராங்ன்னு தெரியலை.

 கர்நாடக அரசு உடனடியாக தண்ணீரை திறந்து டெல்டா விவசாயிகளை காப்பாற்ற வேண்டும்.

அரசு பள்ளிகளில் எல்கேஜி யூகேஜி தொடங்குவது தமிழ்மொழி அழிப்பாகும். 

தமிழில் படித்தோருக்கு மட்டுமே உயர்கல்வி படிப்புக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்.

பிரதமர் மோடி பதவியேற்பு விழாவிற்கு கமல் மற்றும் ரஜினி காந்த் மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது ஏன் சீமானுக்கும் ,டிடிவி தினகரனுக்கு அழைப்பு விடுக்கவில்லை.
தாங்கள் வளர்த்தேடுக்கும் நபர்களை அழைத்துள்ளனர் என்பது தெளிவாக தெரிகிறது.

இதன் மூலம் 
 கமல், ரஜினி நம்மை அழிக்க நினைப்பவர்களுடன் கை கோத்து நடப்பவர்கள் என்பதை தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
பேட்டி.
கௌதமன் ( தமிழ் பேரரசு கட்சி நிறுவனத்தலைவர்)
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.