அரியலூர் மாவட்டம் அண்ணா சிலை அருகே தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஆகஸ்ட் 15ஆம் தேதி திருவள்ளூர் மாவட்டம் ஆத்துப்பக்கம் நேமலூர் ஆகிய ஊராட்சி மன்றங்களில் தேர்வுசெய்யப்பட்ட பட்டியலினத் தலைவர்கள் சுதந்திர தினத்தன்று தேசியக்கொடி ஏற்றுவதை சாதியவாதிகள் தடுத்துள்ளனர்.
இதேபோல் கோவை, திருவண்ணாமலை, திருப்பூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் உள்ள ஊராட்சிகளில் பட்டியலினத் தலைவர்களுக்குப் பாதுகாப்பற்ற நிலையும் அவமதிப்பும் ஏற்பட்டுள்ளது.
எனவே மாநிலம் முழுவதும் தேர்வுசெய்யப்பட்ட பட்டியலின ஊராட்சி மன்றத் தலைவர், துணைத் தலைவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவதோடு அவர்கள் தங்களது ஜனநாயகக் கடமைகளை நிறைவேற்றுவதற்குத் தமிழ்நாடு அரசு உத்தரவாதமான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திட வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
மேலும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் பலரும் தீண்டாமை ஒழிப்பை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.