அரியலூர் மாவட்டம் தா. பழூர் ஒன்றியம் இருகையூர் பட்டியலின ஊராட்சி மன்றத் தலைவர் தட்சணாமூர்த்தி. இவருக்கு அதே ஊராட்சியைச் சேர்ந்த திமுக துணைத் தலைவர் உள்பட வார்டு உறுப்பினர்கள் தொடர்ந்து அவமரியாதை செய்துவந்துள்ளனர்.
அதில் குறிப்பாக அவரைத் தொடர்ந்து அலைக்கழிப்பு செய்தும், ஊராட்சி வேலைகளில் குறுக்கீடு செய்தும் அவமரியாதை செய்துள்ளனர்.
இதனால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக தட்சணாமூர்த்தி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று தற்போது குணமடைந்துள்ளார்.
இது குறித்து அவர் பிடிஓவிடம் கூறியதற்கு, "எழுத படிக்கத் தெரியாமல் எதற்காகத் தலைவராக வந்தீர்கள்" என அலுவலர் கேட்டுள்ளார்.
இந்நிலையில் இன்று (அக்.13) தட்சணாமூர்த்தி தனக்கு நீதி வழங்க வேண்டும் என தா. பழூர் ஒன்றிய அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தற்போது மாவட்ட அலுவலர்கள் அவமரியாதை தொடர்பாக விசாரித்துவருகின்றனர்.
இதையும் படிங்க: ஸ்டாலினுடனான கூட்டத்தில் தரையில் அமர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் - வைரலாகும் புகைப்படம்!