கரோனா வைரஸ் தொற்று காரணமாக, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு, பாதுகாப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில், தற்போது மத்திய உள்துறை அமைச்சரகம் ஊரடங்கு உத்தரவில் சில தளர்வுகளை வழங்கியுள்ளது. அதன்படி தமிழ்நாடு அரசும் ஜூன் ஒன்றாம் தேதி முதல் 50 விழுக்காடு பேருந்துகளை இயக்க அனுமதியளித்துள்ளது.
இதன் ஒரு பகுதியாக, அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியிலுள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணிமனைகளில், அரசு பேருந்துகளை பணியாளர்கள் தயார்படுத்தி வருகின்றனர்
ஏனெனில் 144 தடை உத்தரவு தொடங்கியது முதல், பேருந்துகள் பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் தற்போது பேருந்துகளில் உள்ள பேட்டரி, காற்றின் அளவு, இருக்கைகளை தூய்மைப்படுத்துதல், பேருந்து கழுவுதல் ஆகியப் பணிகளை போக்குவரத்துப் பணியாளர்கள் செய்து வருவதாக அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.