கரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் வரும் 14ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பரவல் கட்டுப்படுத்தப்பட்டாலும், மக்களின் அன்றாட வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையின் காரணமாக நெசவாளர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் ஆண்டிமடம், கல்லாத்தூர், செங்குந்தபுரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் செய்துவந்த நெசவு தொழில் பாதிப்படைந்துள்ளது.
நெசவு செய்வதற்கு வேண்டிய நூல்களை வாங்க முடியாததாலும், அதை விற்பனை செய்ய முடியாததாலும் தங்களது தொழில் முடங்கியுள்ளதாக நெசவாளர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
மேலும் இந்தச் சூழலை சமாளிக்க தமிழ்நாடு அரசு தங்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்க வேண்டும் என கோரிக்கையும் வைத்துள்ளனர்.
இதையும் படிங்க...சென்னையில் 110 பேருக்கு கரோனா பாதிப்பு!