ETV Bharat / state

அரியலூரில் மாட்டு வண்டி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்! - அரியலூரில் மாட்டு வண்டி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்

அரியலூர்: மணல் குவாரி அமைத்து தரக் கோரியும் வண்டிகளில் மணல் அள்ளும் உரிமை கோரியும் மாட்டு வண்டி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Cattle cart owners protest in Ariyalur!
Cattle cart owners protest in Ariyalur!
author img

By

Published : Aug 6, 2020, 7:21 PM IST

அரியலூர் மாவட்டம், செந்துறை அடுத்துள்ள மாத்தூர் பேருந்து நிலையத்தில் மாட்டு வண்டி உரிமையாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதையடுத்து, மணல் குவாரி அமைத்து மாட்டு வண்டியில் மணல் எடுப்பதற்கு அரசு அனுமதி அளிக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.

இது குறித்து மாட்டுவண்டி உரிமையாளர்கள் கூறுகையில், "தற்போது ஊரடங்கு உத்தரவு காரணமாக வாழ்வாதாரம் இழந்து வருமானம் இன்றி உணவிற்கே வழியில்லாமல் தவித்து வருகிறோம். இதனால் எங்களது மாடுகளை அடிமாட்டு விலைக்கு விற்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

மணல் குவாரி அமைத்து தரக்கோரி கடந்த ஒரு வருடங்களாக மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனு அளித்தும் எந்தவித பலனும் ஏற்படவில்லை. இதன் காரணமாக மாட்டு வண்டி உரிமையாளர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

இதைக் கருத்தில் கொண்டு அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால் வரும் 17ஆம் தேதி தளவாய் அருகேயுள்ள தனியார் சிமெண்ட் ஆலை முன் எங்கள் குடும்பத்துடன் வந்து ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்" எனக் கூறினர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.