அரியலூர்: உடையார்பாளையம் அருகே உள்ள கச்சி பெருமாள் கிராமத்தைச் சேர்ந்தவர் கலையரசன். ராணுவ வீரரான (அவில்தார்) இவர் பணி விடுமுறையின் காரணமாக அவரது சொந்த ஊரான உடையார்பாளையத்திற்கு வந்துள்ளார். இந்த நிலையில் குடிபோதையில் அவரது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து ராணுவ வீரரை வீட்டில் வைத்து பூட்டிவிட்டு, கலையரசன் அவரை அடித்து கொடுமை படுத்துவதனால், அவரை அங்கிருந்து அழைத்து போகும்படி கலையரசனின் மனைவி அவரது தாயிடம் கூறியுள்ளார்.
இதுகுறித்து கலையரசன் அப்பகுதி காவல் நிலையத்தில், வீட்டில் அடைத்து உள்ள அவரை விடுவித்து, இதற்கு காரணமான மனைவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொலைபேசி வாயிலாக புகார் அளித்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த உடையார்பாளையம் காவல்துறையினர் கலையரசனை வீட்டு அறையினுள் இருந்து விடுவித்துள்ளனர். அப்போது வீட்டு அறையினுள் போதையில் இருந்த கலையரசன் சம்பவ இடத்தில் இருந்த அவரது மைத்துனரை தாக்கி உள்ளார்.
இதனை தடுக்க முற்பட்ட காவல்துறையினரை, ராணுவ வீரர் மீது எப்படி கை வைக்க முற்பட்டீர்கள் எனக்கூறி போதையில் காவலரின் கன்னத்தில் அறைந்து வயிற்றில் குத்தியுள்ளார். இதையடுத்து, காவல்துறையினர் மீது தாக்குதலில் ஈடுபட்டதையடுத்து உடையார்பாளையம் காவல்துறையினர் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து கலையரசனை கைது செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: மதுரை சித்தாதிபுரம் தடுப்பணை நிரம்பி வழியும் எழில்மிகு ட்ரோன் காட்சிகள்!