அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள உஞ்சினி கிராமத்தில் தனியார் சிமெண்டு ஆலைக்கு சொந்தமான சுண்ணாம்பு கல் சுரங்கம் இயங்கி வருகிறது. இந்த சுரங்கத்திலிருந்து சுண்ணாம்பு கல் ஏற்றிச் செல்வதற்காக மற்றொரு பாதைகளில் அனுமதி பெற்று சுரங்கம் தோண்டினர். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே மாற்று பாதையில் சென்று வந்தனர்.
இந்த நிலையில் அவர்களும் எதிர்ப்பு தெரிவிக்கவே அவர்கள் நல்லாம்பாளையம், இலங்கைச்சேரி உள்ளிட்ட விவசாய நிலங்கள், நீர் வழித்தடம் ஆகியவற்றை ஆக்கிரமித்து பாதை அமைத்து லாரிகளை இயக்கி வந்ததாக குற்றச்சாட்டு எழுந்துவந்தது.
இந்த நிலையில் பொதுமக்கள் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக ஊராட்சி மன்றத் தலைவர்களிடம் மனுக்கள் அளித்தனர். கிராமசபை கூட்டங்களில் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
அதனைத் தொடர்ந்து செந்துறை ஊராட்சி மன்றத் தலைவர் செல்லம் கடம்பன், நல்லாம்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் கொளஞ்சிநாதன், ஊராட்சி மன்றத் துணைத் தலைவர்கள் அதிரடியாக சிமெண்ட் ஆலை லாரி நிர்வாகங்கள் ஆக்கிரமித்து லாரிகளை இயக்கி வந்த பாதைகளை பொக்லைன் இயந்திரம் மூலம் துண்டித்தனர்.
இதையும் படிங்க: நொய்யல் ஆற்றிலுள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்: கோவை ஆட்சியர் பேட்டி!