ETV Bharat / state

ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் 90 ஆயிரம் திருட்டு - காவல் துறையினர் விசாரணை! - ariyalur latest news

அரியலூர் : ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் 90 ஆயிரம் ரூபாய் திருட்டு போனதையடுத்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Theft
Theft
author img

By

Published : Oct 17, 2020, 10:48 AM IST

அரியலூர் நகரில் உள்ள சத்திரம் பேருந்து நிலையத்தில் ரியல் எஸ்டேட் அலுவலகம் நடத்தி வருபவர் அய்யாசாமி. இவர் நேற்று (அக்.17) மதியம் கடையை மூடிவிட்டு தனது வீட்டிற்குச் சென்றுள்ளார். தொடர்ந்து, மாலை வந்து பார்த்த போது அலுவலகம் திறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

பின்னர், அவர் உள்ளே சென்று பார்த்தபோது 90 ஆயிரம் ரூபாய் பணம், ஆவணங்கள் திருடப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து அய்யாசாமி அரியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில், அரியலூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அலுவலகம் அருகே வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பழுதடைந்துள்ளது குறிப்பிடதக்கது.

இதையும் படிங்க : 12 வயது பழங்குடியின சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.