அரியலூர்: சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்று 2021ஆம் ஆண்டிற்கான உலக அளவிலான வானவியல் ஆராய்ச்சி தொடர்பான போட்டியை நடத்தியது. இந்தப் போட்டியில் பங்கேற்று முதல் 10 இடங்களைப் பிடித்த மாணவர்கள், ரஷ்யாவில் நடக்கும் விண்வெளி பயிற்சியில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
குறிப்பாக அரசுப் பள்ளி மாணவர்கள் மட்டுமே இப்போட்டியில் கலந்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து தமிழ்நாடு முழுவதும் சுமார் இரண்டாயிரம் மாணவ, மாணவிகள் இந்தப் போட்டியில் பங்கேற்க விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்திருந்தனர்.
இதனையடுத்து நடைபெற்ற குவிஸ் போட்டியில் ஆன்லைனில் தேர்வு எழுதிய மாணவர்களில், அரியலூர் மாவட்டம் திருமானூர் அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த பிளஸ்-1 மாணவிகள் ரகசியா, வேதாஸ்ரீ ஆகியோர் முதல் பத்து இடங்களுக்குள் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர்.
முதலில் 10 இடங்களில் வந்த மாணவர்களை கல்வி அமைச்சர் பொய்யாமொழி விருது வழங்கி அவர்களைப் பாராட்டியுள்ளார்.
தன்னம்பிக்கையுடன் மாணவிகள்
இது குறித்து மாணவிகள் கூறுகையில், ”மீதமுள்ள ஆறு போட்டிகளிலும் வெற்றிபெற்று ரஷ்யாவில் நடக்கும் விண்வெளி பயிற்சியில் கலந்துகொள்வோம். இதன்மூலம் நாசா உள்ளிட்ட இடங்களுக்கும் செல்வதற்கு வாய்ப்புகள் கிடைக்கும் என்பதால் நாங்கள் தன்னம்பிக்கையுடன் தேர்வுகளை எதிர்கொள்ள பயிற்சிகளை மேற்கொண்டுவருகிறோம்” எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ஜெ., பல்கலைக்கழகம் பெயரளவில் மட்டுமே தொடங்கப்பட்டது - பொன்முடி