அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதியில் உள்ள செந்துறை, ராயம்புரம், சென்னிவனம், மேட்டுப்பாளையம் காவேரி பாளையம் உள்ளிட்ட பல கிராமங்களில் வெள்ளை பூசணிக்காய் எனப்படும் திருஷ்டி பூசணிக்காய் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது காய் முற்றிய நிலையில் உள்ளதால் சாகுபடி செய்யும் பணி தீவிரமடைந்துள்ளது.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ஆயுதபூஜைக்காக இந்த ஆண்டு அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள ராயம்புரம், சென்னிவனம், மேட்டுப்பாளையம், காவேரி பாளையம், போன்ற பகுதிகளில் பூசணிக்காய் அறுவடை செய்து வாகனங்களில் ஏற்றி சென்னை, பெங்களூரு, மதுரை, திருப்பூர் போன்ற நகரங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:
புனேவிலிருந்து குன்னுார் வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்துக்கு வந்தடைந்தது பீரங்கி!