ETV Bharat / state

அரசன் ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்ற விவசாயிகள் கோரிக்கை - அரசன் ஏரி ஆக்கிரமிப்பு

அரியலூர்: அரசன் ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி நடைபெறவிருந்த போராட்டம் அலுவலர்கள் பேச்சுவார்த்தையால் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

people
people
author img

By

Published : Aug 15, 2020, 2:14 AM IST

அரியலூர் மாவட்டம் காமரசவல்லி ஊராட்சி எல்லையில் 130 ஏக்கர் பரப்பளவில் அரசன் ஏரி உள்ளது. இந்த ஏரியில் கடந்த 30 ஆண்டுகளாக 60 ஏக்கருக்கும் மேலாக ஆக்கிரமிப்புகள் இருந்து வந்தது. இந்நிலையில், அரசன் ஏரி பாதுகாப்பு குழுவினர் ஏரியில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றித்தர வேண்டும் என ஏர் மாட்டுடன் ஏரிக்குள் இறங்கி போராட்டம் நடத்தவிருந்தனர்.

144 தடை உத்தரவு அமலில் உள்ளதால் போராட்டக் குழுவினர் தங்களது கோரிக்கைகளை சொல்லுங்கள், மனுவாக கொடுங்கள் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக பொதுப்பணித்துறை அலுவலர் அறிவொளி கேட்டுக்கொண்டார்.

ariyalur people demands to wipe out the arasan lake encroachment
ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை

அதனடிப்படையில் அரசன் ஏரி பாதுகாப்பு குழு சார்பில், ஆலோசனைக் குழு கூட்டத்தில் 130 ஏக்கர் பரப்பளவில் உள்ள அரசன் ஏரியில் ஆக்கிரமிப்புகளை அகற்றித்தர வேண்டும் எனவும், அரசன் ஏரியில் ஆக்கிரமிப்புகளை தொடராத வண்ணம் மழைக்காலத்திற்கு முன்பே கரையை அமைத்து தரவேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

பின்னர் தீர்மான நகல்களை தூத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர், கிராம நிர்வாக அலுவலர் காமரசவல்லி, பஞ்சாயத்து தலைவர், பாசன ஆய்வாளர் ஆகியோரிடம் வழங்கப்பட்டது.

இதையும் படிங்க: ஏரி சீரமைப்பு பணிக்கு முட்டுக்கட்டையிடும் திமுக பிரமுகர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.