ETV Bharat / state

20 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் சந்தித்துக்கொண்ட பள்ளி மாணவர்கள் நெகிழ்ச்சி! - old students re union

அரியலூர்: 20 ஆண்டுகளுக்கு முன் ஒரே பள்ளியில் படித்த மாணவர்கள் மீண்டும் சந்தித்துக்கொண்டு ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டனர்.

ariyalur
author img

By

Published : Oct 7, 2019, 1:36 PM IST

அரியலூர் நகரின் மத்தியில் அமைந்துள்ள ஆர்.சி. மேரி உயர்நிலைப்பள்ளியில் 600-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் கல்வி பயின்றுவருகின்றனர். இந்நிலையில், இப்பள்ளியில் 2000-2001ஆம் கல்வி ஆண்டில் படித்த மாணவர்களின் ஒன்றுகூடல் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் இன்று நடைபெற்றது.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் தற்போது அரசு, தனியார் துறைகளில் பணியாற்றக்கூடிய நூற்றுக்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். நீண்ட வருடங்களுக்குப் பிறகு தங்கள் நண்பர்களைப் பார்த்த மகிழ்ச்சியில் ஒருவரையொருவர் கட்டித்தழுவி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்திக்கொண்டனர்.

அதேபோல், கடந்த இருபது ஆண்டுகளில் தங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்கள், இன்ப, துன்பங்கள் உள்ளிட்டவற்றை பகிர்ந்துகொண்டனர்.

முன்னாள் மாணவர்கள் ஒன்றுகூடல் நிகழ்ச்சி

மேலும், இது குறித்து முன்னாள் மாணவர்கள் கூறுகையில், "இப்படி ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுத்த பள்ளி நிர்வாகத்திற்கு நன்றிகள். இப்பள்ளியில் படித்து பலர் இன்று மருத்துவர்களாகவும் பொறியாளர்களாகவும் பணியாற்றிவருவது மகிழ்ச்சியளிக்கிறது.

இப்பள்ளி மென்மேலும் வளரத் தேவையான உதவிகளை செய்யவும் பழைய மாணவர்கள் என்ற முறையில் நாங்கள் தயாராக இருக்கிறோம்" என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். இந்த நிகழ்வு அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: 500 மாணவர்கள் பங்கேற்ற நெகிழியின் தீமையை விளக்கும் விழிப்புணர்வுப் பேரணி

Intro:அரியலூர் - 20 ஆண்டுகளுக்கு முன் ஒரே பள்ளியில் படித்த மாணவர்கள் சந்திக்கும் நிகழ்ச்சியில் நண்பர்களை பார்த்த மகிழ்ச்சியில் கட்டித்தழுவி ஆனந்தக் கண்ணீர்Body:அரியலூர் நகரின் மத்தியில் அமைந்துள்ளது ஆர்சி மேரி உயர்நிலைப்பள்ளி இப்பள்ளி 1931 ஆம் ஆண்டு துவக்கப் பள்ளியாக ஆரம்பிக்கப்பட்டு தற்போது உயர்நிலைப் பள்ளியாக செயல்பட்டு வருகிறது இப்பள்ளியில் 600க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்

இந்நிலையில் இப்பள்ளியில் 2000- 2001ம் ஆண்டுகளில் படித்த மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் இன்று நடைபெற்றது

இதில் பல்வேறு மாவட்டங்கள் மாநிலங்களில் அரசு மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றக்கூடிய நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ஒன்று சேர்ந்தனர். இவர்கள் நீண்ட வருடங்களுக்கு பிறகு தங்கள் நண்பர்களை பார்த்த மகிழ்ச்சியில் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி ஆனந்த கண்ணீர் விட்டனர் மேலும் கடந்த இருபது வருடங்களில் தங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் இன்பத் துன்பங்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டனர் மேலும் தங்கள் குடும்பம் பணியாற்றக்கூடிய நிருவனம் உடன் பணியாற்றுபவர்கள் பழைய நண்பர்கள் குறித்தும் ஒருவருக்கொருவர் பகிர்ந்துக் கொண்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்

இதுகுறித்து கூறும்போது இப்படி ஒரு சந்தர்ப்பம் வரும் என்ன நினைக்கவில்லை சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்த பள்ளி நிர்வாகத்திற்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம் இப்பள்ளியில் படித்து பலர் இன்று மருத்துவராகவும் இன்ஜினீயராகவும் அரசு பணியிலும் பணியாற்றி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது இப்பள்ளி மென்மேலும் வளர வாழ்த்துக்கள் பள்ளிக்கு தேவையான உதவிகளை செய்யவும் பழைய மாணவர்கள் என்ற முறையில் நாங்கள் தயாராக இருப்பதாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர் Conclusion:பழைய மாணவர்கள் தங்கள் நண்பர்களைப் பார்த்து ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டது பார்ப்பவர் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.