அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரத்தில் மாமன்னர் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட மாளிகை மேட்டில், அகல் ஆய்வு பணிகள் மேற்கொள்வது தொடர்பாக தொல்லியல் துறை ஆணையர் உதயசந்திரன் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர், கீழடி ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் அகழ்வாராய்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுபோல் இங்கும் ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, தமிழர்களின் பெருமை, தொன்மை வெளி உலகத்திற்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்தார். இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் ரத்னா, தொல்லியல் துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க:கொந்தகையில் மேலும் ஒரு மனித எலும்புக்கூடு கண்டெடுப்பு