அரியலூர் மாவட்டத்தில் மூன்று இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் பல்வேறு இடங்களில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதில் ஒரு கட்டமாக அரியலூா் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே புதுக்குடி தெற்கு கரைமேடு கிராமத்து விவசாயிகள்
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி அப்பகுதி மக்கள் முகத்தில் சாம்பலைப் பூசிக்கொண்டு, ஆடு, மாடுகள், மண் சட்டி அடுப்பை உள்ளிட்டவைகளை போராட்டக் களத்தில் வைத்து கொண்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மண்ணை பாதுகாக்க இந்த போராட்டம் நடத்தப்படுகிறது என்று மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி விவசாயிகள் போராடினர். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறுத்தும் வரை இந்த போராட்டத்தை தொடர போவதாகவும் கிராம மக்கள் எச்சரித்தனர்.