ETV Bharat / state

கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கான இழப்பீட்டில் குளறுபடி - விவசாயிகள் ஆர்ப்பாட்டம் - அரியலூர் விவசாயிகள் கோரிக்கை

அரியலூர்: தேசிய நெடுஞ்சாலைப் பணிக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கான இழப்பீட்டு தொகையில் குளறுபடி நடந்துள்ளதாக, அரியலூரை அடுத்த கீழப்பலூர் விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு உரிய இழப்பீடு கோரி விவசாயிகள் முற்றுகை

author img

By

Published : Nov 4, 2020, 3:09 PM IST

அரியலூர் மாவட்டம் கீழப்பலூரில் திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிக்காக கடந்த 2018ஆம் ஆண்டு 120 விவசாயிகளிடம் இருந்து நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. அதில் ஒரே ஊரில் ஒரே பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு ஒரு சதுரடி ரூ.180 எனவும், மற்றொருவருக்கு சதுரடி ரூ. 1,600 எனவும், வேறு ஒருவருக்கு ரூ.2,200 எனவும் இழப்பீடு தொகையாக வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்காததால் அதிருப்தி அடைந்த நிலம் கொடுத்த விவசாயிகள், அப்பகுதியில் நடைபெற்றுக்கொண்டிருந்த கட்டுமான பணிகளைத் தடுத்து நிறுத்தி, முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்திற்கு வந்த கீழப்பலூர் காவல் துறையினர் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய இழப்பீட்டு தொகை பெற்றுத்தருவதாக உறுதியளித்த பின்பு முற்றுகைப் போராட்டம் கைவிடப்பட்டது.

இதையும் படிங்க:

மனைவி மற்றும் குழந்தை சடலங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட கணவர்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.