நாடு முழுவதும் பரவிவரும் கரோனா நோய்த்தொற்று தாக்குதலைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன. இருப்பினும், நோய்த்தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேவருகிறது.
நேற்று மட்டும் அரியலூர் மாவட்டத்தில் ஒரேநாளில் 19 பேருக்கு நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதன் காரணமாக, மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. அதன் ஒரு பகுதியாக இன்று அரியலூர் மாவட்டத்தில் பால், மருந்துக் கடைகள் தவிர்த்து அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.
மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் உத்தரவின்பேரில் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். அத்தியாவசிய தேவையின்றி வாகனங்களில் சுற்றுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து வாகனங்களைப் பறிமுதல் செய்தும்வருகின்றனர். இதனால், பொதுமக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ரத்னா வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க:பெண்கள் மீது தொடரும் அத்துமீறல்!