தமிழ்நாட்டில் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. அதனையொட்டி வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாளான நேற்று அதிமுக அதன் கூட்டணி கட்சிகளான பாமக, தேமுதிக, தமிழ் மாநில காங்கிரஸ் உடனும், திமுக அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் ஆகிய கட்சி வேட்பாளர்களுடன் ஊர்வலமாக வந்து மனு தாக்கல் செய்தனர்.
அதிமுகவினர் ஒற்றுமைத் திடலில் இருந்து பேரணியாக வந்து மனு தாக்கல் தாக்கல் செய்தனர். கடைசி நாளான நேற்று அனைத்து வேட்பாளர்களும் போட்டி போட்டுக்கொண்டு வேட்பு மனு தாக்கல் செய்ததால் தேர்தல் அலுவலர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.