அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே சுத்தமல்லி நீர்த்தேக்கம் அமைந்துள்ளது. கடந்த சில வாரங்களாக பெய்த தொடர் மழையின் காரணமாக 856 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த நீர்த் தேக்கத்தில் நீரின் அளவு உயர்ந்தது.
இந்நிலையில்,அரியலூர் மாவட்ட ஆட்சியர் த. ரத்னா நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்காக நீரினைத் திறந்து விட்டார். இதுகுறித்து பேசிய அவர், தற்போது திறந்து விடப்பட்ட நீரின் மூலம் 5,000 ஏக்கர் பரப்பளவிலான விளை நிலங்கள் பயன்பெறும்.
நீர்த்தேக்கத்தின் இரண்டாம் மதகிலிருந்து 37 கன அடி வீதம் 55 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிடப்படவுள்ளது. இந்த நீரை விவசாயிகள் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்றார்.
இதையும் படிங்க: ' திமுக இரட்டை வேடம் போடுகிறது ' - அமைச்சர் ஜெயக்குமார்!