அரியலூர் மாவட்டம் சுண்டக்குடி மேல்நிலைப் பள்ளியில் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாட வகுப்புகள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் நேற்று (மார்ச் 13) அப்பள்ளியில் வார்டனாக பணியாற்றும் கதிர்வேலு என்பவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். மேலும் சமையலர்கள் கார்த்திகேயன், கலியபெருமாள் மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர் பாலமுருகருகன் ஆகியோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அரியலூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள சிறப்பு வார்டில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனையடுத்து இன்று (மார்ச் 13) பள்ளிக்கு சென்ற சுகாதாரத் துறை அலுவலர்கள், பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் கரோனா தொற்று பரிசோதனை மேற்ககொண்டனர். மேலும் பள்ளி வார்டன், சமையலர்கள் குடும்பத்தினருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதையும் படிங்க: நீட் தேர்வே கூடாது என்பதே எங்கள் நிலைப்பாடு- எடப்பாடி பழனிசாமி