Jobs: அரியலூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள மாபெரும் வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்க விரும்பும் நிறுவனத்தார் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, “அரியலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையம்; இணைந்து மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட அளவில் நடத்தப்படவுள்ளது. இம்மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில், அரியலூர் மாவட்டத்தினைச் சார்ந்த தனியார்த்துறை வேலையளிக்கும் நிறுவனங்கள், தங்கள் நிறுவனத்திற்குத் தேவையான ஆட்களை தேர்வு செய்யவுள்ளது.
அதன் பொருட்டு இம்முகாமில் பங்கேற்பதற்கு ஏதுவாக வரும் 20.01.2023-க்குள் அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தினை நேரில் தொடர்புகொண்டு முன்பதிவு செய்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், விவரங்களுக்கு 04329-228641 அல்லது 9499055914 என்ற தொலைபேசி எண்களைத் தொடர்பு கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: "நீர்த்தேக்க தொட்டியில் மனிதக் கழிவு கலந்தது கண்டிக்கத்தக்கது" - சட்டப்பேரவையில் முதலமைச்சர் விளக்கம்!