ETV Bharat / state

கலியுக வரதராஜ பெருமாள் திருக்கோயில் தேர்த்திருவிழா - அரியலூரில் உள்ளூர் விடுமுறை!

அரியலூர் வரதராஜ பெருமாள் கோயில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு அம்மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அரியலூரில் உள்ளூர் விடுமுறை! தொடர்ந்து 5 நாள் விடுமுறை!

author img

By

Published : Apr 16, 2022, 6:02 PM IST

அரியலூர்: அரியலூர் மாவட்டம், கல்லங்குறிச்சி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு கலியுக வரதராஜ பெருமாள் திருக்கோயில் தேர்த்திருவிழாவினை முன்னிட்டு, வருகிற 18.04.2022 (திங்கட்கிழமை) அன்று அரியலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ’அரியலூர் மாவட்டத்திலுள்ள தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் மற்றும் அரசு அலுவலகங்களுக்கும் இது பொருந்தும், இருப்பினும் இந்த உள்ளூர் விடுமுறையானது தமிழ்நாடு அரசு பள்ளித்தேர்வுத்துறை நடத்தும் பள்ளி இறுதி வகுப்பு அரசு தேர்வுகளுக்கு (மெட்ரிக், ஆங்கிலோ இண்டியன் பள்ளித்தேர்வுகள் உட்பட) பொருந்தாது. அவை ஏற்கெனவே அரசால் திட்டமிடப்பட்டு அறிவிக்கப்பட்ட நாளில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்படுகிறது.

18.04.2022 (திங்கட்கிழமை) அன்று உள்ளூர் விடுமுறை அனுசரிப்பதால், அதனை ஈடுசெய்யும் பொருட்டு, 07.05.2022 (சனிக்கிழமை) அன்று முழு வேலை நாள் எனவும் ஆணையிடப்படுகிறது. மேலும், அறிவிக்கப்பட்டுள்ள விடுமுறையானது செலவாணி முறிச்சட்டம் 1881-ன்கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால், அறிவிக்கப்பட்டுள்ள உள்ளூர் விடுமுறை நாளில் அனைத்து சார்நிலை கருவூலங்களும், மாவட்ட கருவூலமும் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டும், குறைந்த பணியாளர்களைக் கொண்டு செயல்படும்’ என மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்பு எடுக்கக் கூடாது; தனியார் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.