அரியலூர்: அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 36 வயதுமிக்க ஒரு நபர், கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், இவர் கட்டட வேலைக்குச் செல்லும்போது, அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தைகள் கூறி உள்ளார்.
அது மட்டுமல்லாது, தனது உறவினர் வீட்டிற்கு சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவும் செய்துள்ளார். இதை அறிந்த சிறுமியின் பெற்றோர், அந்நபரிடம் கேட்டு உள்ளனர். அப்போது தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், அந்நபர் தலைமறைவாகவும் இருந்து உள்ளார். பின்னர், இது குறித்து சிறுமியின் பெற்றோர் அருகில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்து உள்ளனர். இந்தப் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து தலைமறைவாக இருந்த நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: சிறுமியின் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் தவறாக சித்தரிப்பு - இளைஞர் போக்சோவில் கைது!