சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமான ‘டிக்டாக்’ செயலிக்கு பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தும் வேளையில், அரியலூர் மாவட்டம், முதுகுளத்தைச் சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவர் டிக்டாக்கில் இருசமூகத்தினரிடையே கலவரத்தினை ஏற்படுத்தும் விதமாக பேசி பதிவிட்டிருந்தார்.
இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் ஜாஸ்மின், காவல்துறையினரிடம் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் மீன்சுருட்டி காவல்துறையினர் சத்திய மூர்த்தியைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இது குறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கூறுகையில், ‘யாரும் டிக்டாக் செயலியில் வன்முறையைத் தூண்டும் விதமாக பேசக்கூடாது. அவ்வாறு பேசினால் அவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும்’ என எச்சரிக்கை விடுத்தார்.