அரியலூர் மாவட்ட நெடுஞ்சாலை கட்டுமானம், பராமரிப்புத் திட்டத்தின் கீழ் சாலை அமைப்பதற்காக வெட்டப்பட்ட மரங்களுக்குப் பதிலாக சாலை ஓரங்களில் 5-ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட தமிழ்நாடு அரசு கொறடா ராஜேந்திரன் தொடங்கிவைத்தார்.
12 முதல் 13 அடி வரையுள்ள அரசமரம், வேம்பு, ஆலமரம், நாவல் மரம் போன்ற நாட்டு மரங்களை நடவுள்ளதாகவும்; இதற்காக ரூபாய் 2 லட்சத்து ஐம்பதாயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் நெடுஞ்சாலைத் துறை சார்பாக தெரிவிக்கப்பட்டது.