கரோனா வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டபோதிலும் பொதுமக்களின் நடமாட்டம் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனையொட்டி நகராட்சியின் சார்பில் அனைத்து இடங்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. இந்நிலையில் சின்னகடைத் தெருவிலுள்ள கடைகளுக்கு கிருமி நாசினி தெளிக்கும் பணியை நகராட்சி ஆணையர் குமரன் பார்வையிட்டார்.
அப்போது பொருள்களை வாங்க வந்த பொதுமக்களிடம் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்றும், அவ்வாறு கடைப்பிடிக்காத பொதுமக்களுக்கும், சாலைகளில் எச்சில் துப்புவோருக்கும் ரூபாய் 500 அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்தார். மேலும் சமூக இடைவெளியை பின்பற்றாமல் வியாபாரம் செய்யும் கடை வியாபாரிகளுக்கும் ரூபாய் 500 அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரித்தார். பின்னர், அபராதம் விதிப்பது இன்று முதல் நடைமுறைக்கு வருவதாகவும் கூறினார்.
இதையும் படிங்க: திருப்பத்தூரில் புதியதாக கரோனா பாதிப்பு இல்லை!