ETV Bharat / state

அரியலூர் முழுவதும் ரூ. 12 லட்சம் செலவில் 44 நெற்றிக்கண்! - 12 லட்சம் செலவில் 44 சிசிடிவி கேமராக்கள்

அரியலூர்: மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் 12 லட்சம் ரூபாய் செலவில் 44 சிசிடிவி கேமராக்களை (கண்காணிப்புப் படக்கருவிகள்) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திறந்துவைத்தார்.

அரியலூர் கிராமம் முழுவதும் 12 லட்சம் செலவில் 44 சிசிடிவி கேமராக்கள்- எஸ் பி திறந்து வைத்தார்

author img

By

Published : Aug 28, 2020, 7:42 AM IST

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள பெரியாகுறிச்சி பஞ்சாயத்துக்குள்பட்ட இலைக்கடம்பூர் உள்ளிட்ட கிராமங்களில் அடிதடி, திருட்டு உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்துவருகின்றன. அதைத் தொடர்ந்து அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் கிராமங்களின் முக்கிய இடங்களில் கண்காணிப்புப் படக்கருவிகளைப் பொருத்துமாறு கேட்டுக்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரத்னா ஒப்புதலோடு செந்துறை ஒன்றியக்குழுத் தலைவர் தேன்மொழி சாமிதுரை ஒன்றியப் பொதுநிதியிலிருந்து 12 லட்சம் ரூபாய் செலவில் 44 கண்காணிப்புப் படக்கருவிகளைப் பொருத்த திட்டமிட்டார்.

அதன்படி பஞ்சாயத்தில் உள்ள முக்கிய வீதிகள், பொது இடங்களில் கண்காணிப்புப் படக்கருவிகள் பொருத்தப்பட்டன. இலைக்கடம்பூர் காலனி தெருவில் பொருத்தப்பட்ட கண்காணிப்புப் படக்கருவிகள் தொடக்க விழா அரசுப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. ஊராட்சி மன்றத் தலைவர் கோகிலா அழகுதுரை தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் அரியலூர் மாவட்ட கண்காணிப்பாளர் சீனிவாசன் கலந்துகொண்டு கண்காணிப்புப் படக்கருவிகளைத் தொடங்கிவைத்தார்.

அப்போது அவர் பேசுகையில், "கண்காணிப்புப் படக்கருவி என்பது மூன்றாவது கண்ணான நெற்றிக்கண் ஆகும். குற்றச் செயல்களைத் தடுக்கவும் நடந்த குற்றங்களை விரைவாகக் கண்டுபிடித்து குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத்தர உதவியாகவும் இருக்கும்.

மூன்று காவலர்கள் செய்யும் பணியை ஒரு கண்காணிப்புப் படக்கருவி செய்யும். நகரங்கள் மட்டும் இல்லாமல் தற்போது செந்துறை, பொன்பரப்பி, தளவாய் உள்ளிட்ட கிராமங்களில் இதுபோன்று கண்காணிப்புப் படக்கருவிகளைப் பொருத்த உள்ளாட்சிப் பிரதிநிதிகள் ஒத்துழைப்பு அளித்துவருகின்றனர்.

இந்த ஊராட்சியில் அனைத்து தெருக்களிலும் கண்காணிப்புப் படக்கருவிகள் பொருத்தப்பட்டு முன்மாதிரி ஊராட்சியாகச் செயல்படுகிறது. இதற்கு பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்புத் தர வேண்டுமெனவும் இதனைப் போலவே அனைத்து ஊராட்சிகளும் கண்காணிப்புப் படக்கருவி பொருத்த முன்வர வேண்டும்" எனக் கேட்டுக் கொண்டார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.